தமிழக அரசுத் துறைகளுக்கான இணையதளம் உள்ளது. இதில் ஒவ்வொரு துறையின் திட்டங்கள், டெண்டர் அறிவிப்புகள், அரசாணைகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் இடமாற்ற உத்தரவுகள், பத்திரிகை செய்திக்
குறிப்புகள் உட்பட ஏராளமான விவரங்கள் தினமும் வெளியிடப்படுகின்றன. எனவே இந்த இணையதளம் பல லட்சம் மக்களால் தினமும் பார்வையிடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழக அரசின் இந்த இணையதளம் நேற்று இரவில் நீண்ட நேரம் செயல்படாமல் முடங்கியது. எனவே பலர் தவிப்புக்கு உள்ளாயினர். இதுபற்றி தலைமைச் செயலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்த இணையதளத்துக்கான ‘‘சர்வர்’’ வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுவிட்டதால், பிரச்சினையை உடனடியாக ஆராய முடியவில்லை என்று தெரிவித்தனர்.
No comments:
Post a Comment