வலி தென்மேற்கு சண்டிலிப்பாய் பிரதேச கலாசாரப் பேரவை நடாத்தும் கலாசார விழாவும் நூல் வெளியீடும் மானிப்பாய் பிரதேச சபை கலாசார மண்டபத்தில் 28/03/2015 அன்று பிற்பகல் 2 மணிக்கு பிரதம விருந்தினர் உரை
குருர் ப்ரம்மா ………
வணக்கத்திற்குரிய சமயத்தலைவர்களே, தலைவரவர்களே, சிறப்பு விருந்தினர்களே, கௌரவ விருந்தினர்களே, விருதுகள் பெறும் விற்பன்னர்களே, ஆன்றோர்களே, சான்றோர்களே, எனதருமை சகோதர சகோதரிகளே, குழந்தைகளே!
என் முன்னோர் வாழ்ந்த இந்த மருத நிலப் பரப்பில் இவ்வாறான ஒரு கலாசார விழாவிலும் இந்தப் பிரதேம் பற்றிய அதன் வரலாறு, அதில் பிறந்தெழுந்த கலைகள், கலாசாரம், கல்வி, பாரம்பரியம், சமயம், மருத்துவம், சோதிடம், கைத்தொழில்கள், விளையாட்டுக்கள் போன்ற பலவற்றையும் பற்றிய தகவல்களை உள்ளடக்கிய “கலாதரம்” நூல் வெளியீட்டு விழாவிலும் கலந்து கொள்வது பெருமையைத் தருகின்றது.
என் மூத்த தங்கையாரும் என் மனைவியாரும் இங்குள்ள கிறீன் வைத்தியசாலையில்த் தான் பிறந்தார்கள். சுமார் 73,74 வருடங்களுக்கு முன்னர் எனக்கு ஏடு தொடக்கியது மருதடி விநாயகர் ஆலயத்தில் அவ் வருடத் தேர்த் திருவிழாவின் போது. என்னுடைய உறவினர்கள் பலர் மானிப்பாயிலும் எனது காலஞ்சென்ற மனைவியாரின் உறவினர்கள் சண்டிலிப்பாயிலும் இப்பொழுதும் வாழ்ந்து வருகின்றார்கள். எனினும் அவர்கள் எல்லோருடனுமான என் தொடர்பு தான் சற்று பலவீனமாகிவிட்டது.
இவ்வாறான ஒரு விழாவிலே பங்கு பற்றுவதால் என்னை நானே அறிந்து கொள்ளும் ஒரு நிலையை அடைந்துள்ளேன். என்னுடைய பாரம்பரியப் பிரதேசத்தின் பெருமைகளை எடுத்தியம்பும் வண்ணம் இந்த விழா நடாத்தப்படுவது என்னை இறும்பூது அடைய வைக்கின்றது. என்னைப் பற்றியவர்கள் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பளிக்கின்றது.
சுமார் நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னர் என் தந்தையாரின் முன்னோர்களும், சுமார் நூறு வருடங்களுக்கு முன்னர் என்னுடைய தாயாரின் முன்னோர்களும் இந்த மருத நிலச் சூழலை விட்டு வெளியே சென்று விட்டனர். என் இரு தரப்புப் பாட்டனார்களுந் தாம் பிறந்த இந்தப் பிரதேசத்தில் இருந்து வெளியே சென்றவர்கள் சட்டத்தரணிகளாக அந்தக் காலத்தில் கடமையாற்றினார்கள். என் தந்தையாரின் சகோதரருந் தாயாரின் சகோதரருங்கூட சட்டத்தரணிகளாகத் தான் தங்கள் காலத்தில் கடமையாற்றினார்கள். இப்பொழுது எனது மகனும் சட்டத்தரணியாகவே கடமையாற்றுகின்றார். எமது உள்ளூரை விட்டுத் திரைகடலோடியுந் திரவியந்தேடு என்ற முதுமொழிக்கேற்ப எனது ஒரு பாட்டனார் மலேஷியா சென்று பொருள் ஈட்டினார்.
இன்றைய தினம் இவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்க ஒரு அவகாசத்தை, ஒரு சந்தர்ப்பத்தை அளித்துவிட்டீர்கள். ஆனைக்கோட்டைப் பகுதியில் எம் குடும்பத்தாருக்கு ஒரு வீடு இருப்பதும் சண்டிலிப்பாய்ப் பிரதேசத்தில் இன்றும் எமது காணியிருப்பதும் முற்றாக நாம் எமது பண்பாட்டுச் சூழலில் இருந்து பிரிக்கப்படவில்லை என்ற நற்செய்தியை அறிவிக்கின்றது.
வலிகாமம் தென்மேற்குப் பிரதேச செயலகத்தின் எல்லைக்குள் ஆனைக்கோட்டை, உயரப்புலம், சாவற்காடு, சுதுமலை தெற்கு, சுதுமலை வடக்கு, நவாலி கிழக்கு, மானிப்பாய் வடக்கு, கிழக்கு, தெற்கு என்பன, மாகியப்பிட்டி, சண்டிலிப்பாய் மேற்கு, சண்டிலிப்பாய் மத்தி, பிரான்பற்று, பண்டத்தரிப்பு, வடலியடைப்பு, சில்லாலை தெற்கு, வடக்கு என்பன, மேலும் மாதகல் கிழக்கும் மேற்கும், பெரியவிளான், மாரீசன் கூடல், இளவாலை, முள்ளானை ஆகிய பிரதான நிலப்பிரிவுகள் உள்ளடங்குவதாகக் காண்கின்றேன். இந்த நிலப்பரப்பை மையமாக வைத்தே இந்த கலாசார விழாவும், நூல்வெளியீடும் நடைபெறுகின்றன. யார் மனதில் எழுந்த எண்ணத்தின் வெளிப்பாடோ இந்த விழாக்கள் என்பதை நானறியேன்.
ஆனால் முதன் முதலில் இந்தப் பிரதேசப் பண்பாட்டைப் பிரதிபலிக்க, அதன் அடையாளங்களை ஆவணப்படுத்த, தனித்துவத்தினைத் தம்பட்டம் அடிக்க, வரலாற்றை வரம்பமைக்க ஆர்வம் கொண்டெழுந்த எமது அலுவலக சகோதர சகோதரியினர் பாராட்டுக்குரியவர்கள். எமது நன்றி நவிலல்களுக்குப் பாத்திரமானவர்கள்.
பொதுவாக இந்நாட்டின் வடகிழக்கு மாகாணங்களில் வாழ்ந்து வந்தவர்கள் தமது பாரம்பரியத்தை, வரலாற்றை, வாழ்க்கை முறையை ஆவணப்படுத்தாது விட்டுவிட்டனர் என்ற ஒரு குற்றம் எம் எல்லோரையுஞ் சார்ந்திருக்கின்றது. அதற்கான காரணங்களையும் எமது சரித்திராசிரியர்களும் தொல்பொருளியலாளர்களும் எடுத்தியம்பி உள்ளார்கள்.
முக்கியமாக நிரந்தரமாக நிலைக்கூடிய கருங்கற் பாறைகளும் குகைகளும் இல்லாமையே இதற்குக் காரணம் என்றிருக்கின்றார்கள். அதாவது கர்ண பரம்பரையாகச் செய்திகளைச் சொல்லி வருவது ஒரு வழி. ஆனால் அது மிகைப்படுத்தலுக்கும் மறதிக்கும், மாற்றலுக்கும் ஆட்படக் கூடியது. ஓலைச்சுவடிகளில் எழுதிவைப்பது அடுத்தவழி. அவை நிரந்தரமாக நிலைக்கக்கூடியவையல்ல. அடுத்து கல்வெட்டுக்களில் கடைந்து வைப்பது; சிலாசாசனங்களில் செதுக்கி வைப்பது. அதற்கான கருங்கற்களைக் கொண்டிராத பிரதேசமே எமது வட மாகாணம்.
புத்த சமயம் இலங்கைக்கு வந்த பின்னர் டம்புல்ல, சீகிரிய, பொலநறுவை, அனுராதபுரம் போன்ற இடங்களில் செய்திகளைக் கருங்கற்களில் செதுக்கி வைத்துச் சென்றார்கள் பௌத்த பிக்குகளும் அக்கால அரச அலுவலர்களும். இதனால் பெரும்பான்மையின மக்களின் வரலாறு பலவாறாக வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இங்கு வாழ்ந்து வந்த தமிழ்ப் பேசும் மக்களின் தரமான பாரம்பரியம் தவறாகப் புனையப்பட்டு வருகிறது.
அண்மையில் சில பல கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதென்னவோ உண்மைதான். எமது பேராசிரியர் பத்மநாதன் அவர்கள் அக் கல்வெட்டுக்களைக் கண்டு ஆராயப் பகீரதப் பிரயத்தனங்களில் ஈடுபட்டு ஓரிரு வருடங்களின் பின்னரே அவற்றைக் கண்டதாகக் கூறியுள்ளார் இந்து பாரம்பரியம் பற்றிய அவரின் சரித்திர நூலில். தமிழ்ப் பேசும் மக்களைப் பற்றிய சாதகமான கல்வெட்டுக்கள் காட்சிக்கு வைக்கப்படாதிருப்பதே இதற்குக் காரணம். வடமாகாண மக்கள் பற்றிப் போதுமான வரலாற்றுச் செய்திகளை இனியேனுங் கணனிப்படுத்தி வைக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
எமது பொது நூலகம் ஆயிரத்துத் தொழாயிரத்து எண்பத்தியொன்றில் ஆயிர ஆயிரமாம் அருமருந்தன்ன நூல்களை அக்கினிக்கு ஆகுதி செய்த போது எமது வரலாறு வாயடைக்கப்பட்டது. அழிந்து போன தொண்ணூற்றி ஐயாயிரத்திற்கும் மேலான நூல்கள் எமது தொன்மையைத் துடைத்தெறிந்து விட்டன.
உங்களுக்கும் ஒரு பாரம்பரியமா, உங்களுக்கும் ஒரு தொடர் கதையா என்று கேட்பது போல் காப்பாற்றி வைத்த நூலோவியங்களைக் கரும்புகைக்கு ஆளாக்கி விட்டார்கள் கயவர்கள் சிலர். ஆனால் அதனால் எமது வரலாறு வாழாத ஒரு வாழ்க்கை என்று ஆகிவிடாது. எமது பாரம்பரியம் பாதியில் பறிபோன பரம்பரைவழி என்றாகிவிடாது. எமது கர்ண பரம்பரை காற்றோடு காற்றாகிவிட்ட கருத்துக்கள் என்றாகிவிடாது.
தரவுகளின் போதாமையால் ஒரு தமிழ்ப் பேசுஞ் சரித்திர ஆசிரியர், 1965ம் ஆண்டளவில், சோழர் காலத்தில்த் தான் தமிழர்களின் நிரந்தர வதிவிடங்கள் இருந்ததற்கான நிலையான தடையங்கள் காட்சி அளிக்கின்றன என்றார். இதை வைத்துப் பத்தாம் நூற்றாண்டில் பாரதத்தில் இருந்து பரிசேறி வந்த பத்தாம் பசலிகளே இலங்கைத் தமிழர்கள் என்று கூறத் தலைப்பட்டனர் சில சிங்களச் சில்லறையாளர்கள். நான் 2001ம் ஆண்டில் உச்ச நீதிமன்ற ஏற்புரையில் இந் நாட்டுத் தமிழ்ப் பேசும் மக்களின் தொன்மை பற்றித் தொட்ட போது அந்தத் தமிழ்ச் சரித்திர ஆசிரியரின் கருத்தை முன்வைத்து பத்தாம் நூற்றாண்டில் பரதேசிகளாக வந்தவர்கள் பாரம்பரியம் பற்றி பேசுகின்றார்கள் என்று
பத்திரிகைகள் எங்கும் என்னை பலவாறாக நிந்தித்துப் பேசினார்கள்.
அப்படியிருந்தும் அதே சரித்திர ஆசிரியர் 2005ம் ஆண்டளவில் புதியதொரு நூலை அவுஸ்திரேலியாவில் இருந்து வெளிக் கொண்டு வந்து சரித்திர காலத்திற்கு முன்பிருந்தே திராவிடர்கள் இம் மண்ணில் வாழ்ந்து வந்துள்ளனர் என்ற கருத்தை ஆணித்தரமாகப் பதிந்து விட்டிருந்தார். எனவே சரித்திரம் சாகவில்லை. புதிய காட்சிப் பொருட்கள் போதுமான தரவுகளைத் தந்து எமது வரலாற்றின் வளத்தினை வானறியச் செய்தன.
எனவே தீயினால் தீயவர்கள் தீய்த்திருந்தாலும் எமது வரலாறுந், தொன்மையும், பாரம்பரியங்களும், பல்கலைகளும், பாடப் புத்தகங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டிருந்தாலுங் கூட இப்பேர்ப்பட்ட ஆவணப்படுத்தல்கள் மூலம் எமது பல காலப் பண்பாடு, வளமான வரலாறு, சிறப்பான வாழ்க்கைமுறை யாவும் அம்பலப்படுத்தப்படுவன. எமது வடமாகாணம் எங்கிலும் வாழ் எம்மவர் தம் பாரம்பரியங்களைத் இனித் தரமாக வெளிக் கொண்டுவர வழியமைத்துக் கொடுத்துள்ளீர்கள் நீங்கள். எமது பாராட்டுக்களுக்குப் பாத்திரமாகின்றீர்கள்.
மலரின் அகத்தில் மகத்தான பல செய்திகளைச் சேகரித்து உள்ளடக்கியுள்ளீர்கள். உங்கள் பிரதேச செயலகத்தின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிப் பேசி விட்டு, அழியும் அழகிய வாழ்க்கைக் கோலங்கள் பற்றிய கட்டுரையை உள்ளடக்கிப் பின்னர் சமயமும் பண்பாடும், கலை - இலக்கிய எழுச்சி, மருத்துவம், கிராமங்கள்- வரலாறும் பழமையும், கல்விப் பாரம்பரியம் என்ற தலையங்கங்களின் கீழ் கட்டுரைகளை அமைந்துத் தந்துள்ளீர்கள்.
நூல்களை நுண்ணிப்பாக என் நயனங்கள் நோக்க நாளெடுத்துத்தராமல் இருக்கின்றான் இறைவன். வேலைகளின் பழு அப்பேர்ப்பட்டதாய் அமைந்து விட்டது. எனினும் ஆவலாக மருத்துவம் பற்றிய சில கட்டுரைகளைப் புரட்டிப் பார்த்தேன். காரணம் எங்கள் சிறு வயதில் நாங்கள் மேலைத்தேய வைத்தியர்களிடம் போவது மிகக் குறைவாகவே இருந்தது. இங்கு மானிப்பாயில் பிறந்து வளர்ந்த என் தாயாரின் கைமருந்துகளே எம்மை நோய்களில் இருந்து காப்பாற்றின. அவர் சளித்தொல்லை, தடிமல், இருமல் போன்றவற்றிற்கு மருந்தாகக் குறிப்பிட்ட அதே மூலிகைகளேயே குறிப்பிட்டிருந்தார் உங்கள் கட்டுரை ஆசிரியரும். தூதுவளை, மொசு மொசுக்கை, இஞ்சி, எலுமிச்சை, கண்டல் கத்திரி, துளசி போன்ற மூலிகைகளின் பெயர்கள் எனக்குச் சிறுவயதில் இருந்தே பரீட்சயப்பட்ட மூலிகைச் செடிகளின் பெயர்கள்.
நான் மல்லாகம் மாவட்ட நீதிபதியாக இருந்த காலத்தில் துளசியும் கற்பூரவல்லியுங் காடாக வளர்ந்திருந்தன எனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில். மக்கள் வந்து எம்மிடம் சொல்லி விட்டு இலைகளைப் பறித்தெடுத்துச் செல்வார்கள். அவற்றின் மீது எனக்கிருந்த நாட்டமோ என்னவோ நான் இருந்த வரையில் அடர்த்தியாக வளர்ந்த அந்த மூலிகைகள் நான் விட்டுச் சென்ற பின் இருந்த இடந் தெரியாது போய்விட்டன என்று என் முன்னைய சேவையாளர்கள் பின்னர் கூறக் கேட்டுள்ளேன். மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையில் ஏதோ ஒரு பிணைப்பு உண்டு.
இந்த உலகத்தில் சேர்ந்து பிறந்திருந்து பின்னர் மண்ணோடு மண்ணாகும் சகோதர இனங்கள் நாங்கள். அன்புடன் எமது சுற்றாடலை நாங்கள் நோக்கும் போது அவை எமக்கு அனுசரணையாக வளரத் தலைப்படுகின்றன. எமது மனங்களில் ஆணவமும் அறிவற்ற வெறுப்பும் பொறாமையும் குடிகொள்ளும் போது எப்படியோ எம்மைச் சுற்றியிருக்கும் இயற்கைக்கு அது தெரிந்து விடுகிறது. இதனால்த்தான் பௌத்த மதத்தில் ஜீவகாருண்யத்தை மிக உயர்ந்த ஒரு குணமாக அடையாளம் கண்டுள்ளார்கள். அதனை அம் மதத்தவர் இன்று இலங்கையில் பின்பற்றிப் போற்றி வருகின்றார்களா என்பது பற்றி நான் ஆராய முற்படவில்லை! இயற்கையோடு ஒன்றிய எமது வாழ்க்கையில் மரங்களும், செடிகளும், மிருகங்களும், பறவைகளும், ஜந்துக்களும் ஒரு முக்கிய இடத்தைப் பெற்று வந்துள்ளன என்பதையே கூற வந்தேன். அந்தப் பாரம்பரியத்தில் வாழ்ந்து வந்துள்ள எங்கள் வம்சாவழியினரின் வாழ்க்கை முறையை, வழி வழி வந்தவர்களின் வாழ்க்கையின் வழிகாட்டல்களை உள்ளடக்கி இந்த நற் கைங்கரியத்தில் ஈடுபட்டுள்ளீர்கள்.
இதே போன்று சகல எமது செயலகங்களும் தம் தனியிடத்துத் தகமைகளை, தத்துவங்களை, தொன்மையான தரவுகளை ஆவணப்படுத்த முன்வந்துள்ளதாக அறிகின்றேன். வரலாறு இல்லாது வள்ளத்தில் வந்த வகையற்ற மக்களே எம்மவர்கள் என்று அதிகாரத்தில் உள்ளவர்கள் எமது வரலாறு தெரியாது பிதற்றுவதைச் சரிசெய்ய சகல எமது செயலகங்களும் இவ்வாறான கலையான, களையான கைங்கரியங்களில் ஈடுபடுவது எமக்கு நல்லதொரு எதிர்காலத்தை நல்கும்.
விரைவில் எமது வடமாகாண மக்கள் தமது உண்மையான சத்தான வலுவான பாரம்பரியத்துடன் இணைந்து வாழ நாங்கள் எல்லோரும் சேர்ந்து பாடுபடுவோமாக! இன்றைய விழா வலிகாமம் தென்மேற்கு மருதநிலப் பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்துக் காட்டுவதாக! என்னை அழைத்த அனைவர்க்கும் நன்றி தெரிவித்து விடைபெறுகின்றேன். நன்றி. வணக்கம்
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

No comments:
Post a Comment