வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நாளை முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். யாழ். நல்லூர் ஆலய முன்றலில் காலை 9 மணியளவில் இவ்வாறு போராட்டத்தினை அவர் ஆரம்பிக்கவுள்ளார்.
வட பகுதியில் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு, காணாமல் போனவர்களின் நிலைமை மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை,
இராணுவத்தில் சரணடைந்த காணாமல் போனவர்கள் நேர்ந்த கதி மற்றும் மீள்குடியேற்றம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியே இவர் இந்த பேராட்டத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில், வடபகுதியில் காணாமல் போனவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் அனைவரும் அனந்தி சசிதரனுக்கு ஆதரவு வழங்கவுள்ளனர்.
தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை இந்த உண்ணாவிரத போராட்டத்தினை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment