March 5, 2015

நல்லாட்சி அரசாங்கம் நாடு திரும்பிய 10 தமிழர்களை கைது செய்துள்ளது: ஜே.டி.எஸ்.!

 இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில் நாட்டில் இருந்து வெளியேறிவர்களை மீண்டும் நாடு திரும்புமாறு புதிய அரசாங்கம் அழைப்பு விடுத்த பின்னர், மத்திய கிழக்கு, அவுஸ்திரேலியா, இத்தாலி போன்ற நாடுகளில் இருந்து நாடு திரும்பிய ..

... சுமார் 10 தமிழர்கள், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கையின் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் மாத்திரம் இவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பின் இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.
புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது தாயை பார்ப்பதற்காக 10 வருடங்களுக்கு பின்னர் இலங்கை திரும்பிய 41 வயதான ஒரு பிள்ளையின் தாய் ஒருவர் அண்மையில் கட்டுநாயக்க விமானத்தில் வைத்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
பிரான்சில் இருந்து தாயை பார்க்க சென்று விட்டு தனது 8 வயது மகளுடன் மீண்டும் பிரான்ஸ் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற முருகேசு பகிரதி என்ற பெண்ணை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கைது செய்தனர்.

No comments:

Post a Comment