கொக்குவில் இந்துக்
கல்லுாரியின் விளையாட்டு மைதானத்திற்குள் இருக்கும் மாலதி கலையரங்கு
விசமிகள் சிலரால் இன்று அதிகாலை தீ மூட்டி எரிக்கப்பட்டுள்ளது. இதனால்
பெறுமதிவாய்ந்த பல விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கட்டடமும் கடும்
சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த கட்டடம்
மின் ஒழுக்கினால் தீப்பற்றி எரிந்ததாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்த
போதும் இக் கட்டிடத்திற்க்கான மின் இனைப்பு கொக்குவில் மத்திய சனசமூக
நிலையத்தில் இருந்தே வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் அங்கு மின் இணைப்பு
துண்டிக்கபட்டுள்ளதாக கழகத்தினர் தெரிவித்தனர்
கொக்குவில்
இந்துக்கல்லுாரியின் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியின் போதும் சில
மாணவர்கள் கடும் மது போதையில் அங்கு தகராறுகள் புரிந்ததும்
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment