காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் இரகசிய முகாம்களில் தடுத்து
வைக்கப்பட்டுள்ளதுடன், இராணுவத்தினர் தமது சப்பாத்துக்களைத்
துடைப்பதற்கும், வேறு வேலைகளுக்கும் அவர்களைப் பயன்படுத்துவதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் காணாமல்போன உறவினர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வடமாகாண முதலமைச்சரை சந்தித்து, மகஜர் ஒன்றினையும் கையளித்திருந்தனர்.
இதன்போது கருத்து வெளியிட்டபோதே முதலமைச்சர் மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார்.
காணமற் போகச் செய்யப்பட்டவர்கள் உயிருடனே இருக்கின்றனர். அவர்களை இரகசிய
முகாம்களில் தடுத்து வைத்திருக்கும் இராணுவத்தினர் தங்களின்
சப்பாத்துக்களைத் துடைக்கவும் பிற வேலைகள் செய்யவும் பயன்படுத்தபடுகின்றனர்
என எனக்கு இரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது.
இது குறித்து ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தியிருக்கிறோம். விரைவில் அவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர் என விரைவில் கண்டுபிடித்து அவர்களை விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன். இதற்கான வேலைகளை நான் முன்னெடுத்திருக்கிறேன் என வடக்கு முதல்வர் மேலும் தெரிவித்தார்.
துடைப்பதற்கும், வேறு வேலைகளுக்கும் அவர்களைப் பயன்படுத்துவதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் காணாமல்போன உறவினர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வடமாகாண முதலமைச்சரை சந்தித்து, மகஜர் ஒன்றினையும் கையளித்திருந்தனர்.
இதன்போது கருத்து வெளியிட்டபோதே முதலமைச்சர் மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார்.
இது குறித்து ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தியிருக்கிறோம். விரைவில் அவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர் என விரைவில் கண்டுபிடித்து அவர்களை விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன். இதற்கான வேலைகளை நான் முன்னெடுத்திருக்கிறேன் என வடக்கு முதல்வர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment