March 7, 2015

புறப்படு தமிழா புறப்படு ஜெனிவா நோக்கி அலைகடலென புறப்படு !

உலகம் உன்னைக் கைகளுவினாலும்
நடுத்தெருவில் உன்னை நிறுத்தினாலும்
முடியும் வரை முட்டி மோதிப்பாரு
ஒருபொழுதும் மனம் உடைந்த்திடதே
இவ்வுலகில் நல்லவன் யாரு
கெட்டவன் யாரு

போனது போச்சு ஆனது ஆச்சு
போடு போடு வீறு நடை போடு
விடிவை நோக்கி
ஐநாவின் முன்றலுக்கு.
தப்பானவர்களுக்கு பயந்தது விடாதே
உன்னை நீ ஒரு யான் வயிற்றுக்கு
விற்று விடாதே
பத்தோடு  ஒன்றாய்  நீ  இருந்து விடாதே
ஒதுங்கி விடாதே
தர்மம் உன் பக்கம்
உனக்கென்ன துக்கம்
உயிர் வாழ நியாயத்தை விட்டு விடாதே
உலகத்தில் உனக்காக மட்டும்
வாழ்ந்து செத்து விடாதே
காயங்கள் இருந்ததாலும் கலங்கி
விடாதே
நீ சிந்தும் கண்ணீரில் ஒருபோதும்
கரைந்து விடாதே
மழை போல வீழ்ந்து நதிபோல
எழுந்து ஓடு
தமிழ் ஈழம் எனும் வெற்றியை
நோக்கி ஓடு
விரைவாக  ஓடு
மாவீரர்களின் கனவை மனதில்
சுமந்து ஓடு
வெற்றி நமக்கே !!!
                         -றஞ்சன்-

No comments:

Post a Comment