முள்ளிவாய்க்காலிலிருந்து காணாமல் போனோருக்கான நீதிவேண்டி ஆரம்பிக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பேரணிக்கு ஆதரவு தெரிவித்து பங்கெடுத்துள்ள மக்கள் பிரதிநிதிகளிற்கு கொலைமிரட்டல்கள் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேரணி ஆரம்பமானது முதல் தொடர்ச்சியான நெருக்குவாரங்களை படைத்தரப்பு பிரயோகித்துவருவதாகவும் எந்நேரமும் ஏதும் நிகழலாமென்ற அச்சம் தொடர்வதாகவும் அங்கிருந்து பேசிய வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் சதீஸ் கருத்து தெரிவித்தார்.
முன்னதாக ஊர்வலமாக வந்திருந்தவர்களை வழிமறித்து மிரட்டியதுடன் நீண்ட நேரம் தடுத்து வைத்திருந்ததாகவும் பின்னராக மோட்டார் சைக்கிள்களினில் பின்தொடர்ந்ததாகவும் தெரியவருகின்றது.
இந்நிலையினில் ஒய்வு மற்றும் பாதுகாப்பு கருதி புதுக்குடியிருப்பினில் ஆதரவாளர் ஒருவரது வீட்டினில் இன்றிரவு ஊர்வலத்தினில் பங்கெடுத்தவர்கள் தங்கியுள்ள நிலையினில் அங்கும் வருகை தந்திருந்த இராணுவ புலனாய்வு பிரிவினர் சுமார் ஒரு மணிநேரம் வரையினில் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.தம்மை யாரென அடையாளப்படுத்தியிராத குறித்த நபர்கள் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
அவர்களது நடவடிக்கைகளினால் ஊர்வலத்தினில் பங்கெடுத்தவர்களும் அவர்கள் தங்கியுள்ள ஆதரவாளர்களது குடும்பமும் அச்சமடைந்துள்ளன.
மாற்றத்தின் பி;ன்னராக ஜனநாயகம் திரும்பியிருக்கின்றதாக செய்யப்படும் பிரச்சாரங்கள் எத்தகைய அளவினில் உள்ளதென்பது இதன் மூலம் வெளிப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் இன்றிரவு ஊடகங்களிற்கு விடுத்துள்ள செய்திக்குறிப்பினில் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment