March 5, 2015

29ம் நாளான இன்று விடுதலைச் சுடர் பயணம் ஹனோவர் நகரை வந்தடைந்தது!

தமிழினவழிப்பிற்கு நீதி கோரி 04.02.2015 அன்று தொடக்கம் ஜெனிவா நோக்கி பயணித்து வரும் விடுதலைச் சுடர் பயணம் ம் தொடக்கம் யேர்மனியூடாக பயணித்து வருகின்றது. நேற்றையதினம் யேர்மனி தலைநகர் பேர்லின் ஊடாக பயணம் செய்த
விடுதலைச் சுடர் இன்று (04.05.2015)ஹனோவர் நகரை வந்தடைந்து.

பேர்லின் நகரில் இருந்து எடுத்துவரப்பட்ட விடுதலைச் சுடர் இன்று ஹனோவர் வாழ் தமிழ் மக்களிடம் கையளிக்கப்பட்டது. 10 மணியளவில் அகவணக்கத்துடன் ஹனோவர் நகர் புகையிரத நிலையத்தில் விடுதலைச் சுடர் பயணம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
விடுதலைச் சுடர் ஹனோவர் நகர மையப்பகுதி வழியாக தமிழ் உணர்வாளர் அமலதாஸ் அவர்களால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதன்போது சிங்கள அரசினால் 67 ஆண்டுகளாக திட்டமிட்டு நடாத்தப்பட்டு வரும் இனவழிப்பை விபரிக்கும் துண்டுப்பிரசுரங்கள் மக்களிற்கு வழங்கப்பட்டது. அத்தோடு தமிழினவழிப்பிற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாதைகளும் எடுத்துவரப்பட்டன. இதன்போது பல்லினமக்களும் தமிழர்களிற்கெதிராக இலங்கைத்தீவில் நடைபெறும் பிரச்சனைகளை கவனத்துடன் உள்வாங்கி சென்றனர். இன்றைய பயணம் 12:30 மணியளவில் நிறைவு செய்யப்பட்டு Bielefeld மக்களிடம் கையளிப்பதற்காக எடுத்துச்செல்லப்பட்டது.
நாளைய தினம் (05.03.2015) Bielefeld மற்றும் Dortmund நகரங்களில் விடுதலைச் சுடர் பயணம் நடைபெறவுள்ளதால் அனைத்து மக்களையும் தமிழினவழிப்பிற்கு நீதி கோரி நடைபெறும் இவ் பயணத்தில் உணர்வுடன் கலந்துகொள்ளுமாறு உரிமையுடன் அழைக்கிறோம்.
நாள் : 05.03.2015
நேரம் : 10:00
இடம் : Bielefeld, Jahnplatz
நாள் : 05.03.2015
நேரம் : 15:00
இடம் : Dortmund, Hauptbahnhof Königswall





No comments:

Post a Comment