இலங்கையில் புதிதாக வந்த சிறிசேன அரசோடு சேர்ந்துகொண்டு இந்த மோடி அரசாங்கம் செய்யும் பச்சைத் துரோகத்துக்கு உதாரணம்தான், இலங்கையில் நடந்த இனப்படுகொலை பற்றி, ஐ.நா சமர்ப்பிக்கும்
அறிக்கையை ஆறு மாதங்கள் ஒத்திப்போட்ட விவகாரம் என வைகோ கொந்தளிக்கிறார்
இது குறித்து ஆனந்த விகடன் சஞ்சிகையில் வெளிவந்துள்ள சில முக்கிய பகுதிகள்
கேள்வி - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்திருக்கிறீர்களே..?
பதில் - மன்மோகன் சிங் இந்தியப் பிரதமராகக் கொண்டுவந்த திட்டங்கள் பலவற்றை நான் கடுமையாக விமர்சித்துள்ளேன்.
ஆனால், மன்மோகன் சிங் என்ற மனிதர் மீது எனக்கு அளவு கடந்த மரியாதை உண்டு.
அவர் கல்லூரிப் பேராசிரியராக இருந்தபோது, மாணவர்களை சைக்கிள் கேரியரில் வைத்து அழைத்துச்செல்வார்’ என்பார்கள். அப்போது முதலே அவர் எனக்கு ஆதர்சம்.
அதனால் அவரைச் சந்தித்தேன். 'இலங்கையில் இப்போது என்ன நடக்கிறது?’ என என்னிடம் கேட்டார். 'கொடுமைகள் இன்னும் அதிகரித்துள்ளன’ என்றேன்!''
கேள்வி - நரேந்திர மோடி பிரதமராக வரவேண்டும் என விரும்பி, அந்தக் கூட்டணியில் இடம்பெற்று, அதற்காகப் பிரசாரம் செய்தீர்கள். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி எப்படி இருக்கிறது?
கேள்வி - நரேந்திர மோடி பிரதமராக வரவேண்டும் என விரும்பி, அந்தக் கூட்டணியில் இடம்பெற்று, அதற்காகப் பிரசாரம் செய்தீர்கள். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி எப்படி இருக்கிறது?
பதில் - நரேந்திர மோடி அரசைப்போல மிக மோசமான அரசை இந்தியா இதுவரை சந்தித்தது இல்லை. அதை மக்கள் புரிந்துகொண்டுவிட்டனர். அதனால்தான், டெல்லி சட்டமன்றத் தேர்தலில், அந்த மக்கள் விளக்குமாற்றால் கூட்டிப்பெருக்கி பாரதிய ஜனதாவை வரலாற்றுக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டனர்.
கேள்வி - ஈழப் பிரச்சினையிலேனும் மோடி அரசாங்கத்தின் நிலைப்பாடு மாறியிருக்கிறதா?
கொஞ்சம் மாறி இருக்கிறது. முன்பைவிட கொஞ்சம் கூடுதலாகத் துரோகம் செய்கிறார்கள். அதுதான் அந்த மாற்றம்!
புதிதாக வந்த சிறிசேன அரசோடு சேர்ந்துகொண்டு இந்த மோடி அரசாங்கம் செய்யும் பச்சைத் துரோகத்துக்கு உதாரணம்தான், இலங்கையில் நடந்த இனப்படுகொலை பற்றி, ஐ.நா சமர்ப்பிக்கும் அறிக்கையை ஆறு மாதங்கள் ஒத்திப்போட்ட விவகாரம். எனபதிலளித்துள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் திரு வைகோ அவர்கள்.
No comments:
Post a Comment