இன்று( 05-03-2015) மாலை 5.00 மணியளவில் முள்ளிவாய்காலில் இருந்து புதிய சிந்தனைகளுடன் ஒரு விழிப்புணர்வூட்டும் நடைப்பயணம் ஆரம்பமானது.
இப்பயணம் முள்ளிவாய்காலில் இருந்து நல்லூரை (08 ஆம் திகதி) சென்றடையும். இளைஞர் அணியினர் மேற்கொள்கின்றனர். இதே நல்லூரில் தான் 1987 ஆம் ஆண்டு ஐந்து அம்ச கோரிக்கையுடன் தியாகி திலீபன் உண்ணா நோன்பிருந்தார்.என்பது குறிப்பிடத்தக்கது.
இவ் நடைபவனி ஆரம்பமாகி சிறிது நேரத்தில் முள்ளிவாய்க்கால் சாலை சந்தியில் வைத்து நடைபவனி வருவோரினை வழிமறித்த இராணுவம் கடுமையாக அச்சுறுத்தியுள்ளனர். மேலும் புலனாய்வுப் பிரிவினர் தற்போது வரை பின்தொடர்ந்த வண்ணமேயுள்ளனர்.
கடத்தப்பட்டு காணாமல் போனோர் அரசியல் கைதிகளின் விடுதலை மீள்குடியேற்றம் இராணுவப்பிரசன்னம் குறைக்கப்படல் போன்ற கோரிக்கைகள் முன்வைத்து நடைபெறுகின்ற இவ் நடைபவனி அச்சுறுத்தல்களையும் மீறி நடைபெறுகின்றது..
இவ் உண்ணாநோன்பின் 05 அம்ச கோரிகையாவன
1. போரினால் பாதிக்கப்பட்ட பெண்களின் அன்றாட பிரச்சினை தீர்க்கபடவேண்டும், சரணடைந்த போராளிகள் விடுவிக்கப்படவேண்டும்,இரகசிய தடுப்பு முகாம்கள் வெளிபடுத்தபட வேண்டும்.
2. தமிழ்அரசியல் கைதிகள் நிபந்தனை இன்றி விடுவிக்கபட வேண்டும்.
3. பறிக்க பட்ட நிலங்கள் விடுக்க பட வேண்டும்.
4. வடக்கு கிழக்கில் உள்ள 87 ஆயிரம் பெண் தலைமைத்து குடும்பங்களின் வாழ்வில் மறுமலட்சி ஏற்படக்கூடிய திட்டங்கள்
வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.
5. சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதே நல்லூரில் தான் 1987 ஆம் ஆண்டு ஐந்து அம்ச கோரிக்கையுடன் தியாகி திலீபன் உண்ணா நோன்பிருந்தார்.என்பது குறிப்பிடத்தக்கது.
இவ் நடைபவனி ஆரம்பமாகி சிறிது நேரத்தில் முள்ளிவாய்க்கால் சாலை சந்தியில் வைத்து நடைபவனி வருவோரினை வழிமறித்த இராணுவம் கடுமையாக அச்சுறுத்தியுள்ளனர். மேலும் புலனாய்வுப் பிரிவினர் தற்போது வரை பின்தொடர்ந்த வண்ணமேயுள்ளனர்.
கடத்தப்பட்டு காணாமல் போனோர் அரசியல் கைதிகளின் விடுதலை மீள்குடியேற்றம் இராணுவப்பிரசன்னம் குறைக்கப்படல் போன்ற கோரிக்கைகள் முன்வைத்து நடைபெறுகின்ற இவ் நடைபவனி அச்சுறுத்தல்களையும் மீறி நடைபெறுகின்றது.
No comments:
Post a Comment