முள்ளிவாய்க்காலிலிருந்து காணாமல் போனோருக்கான நீதிவேண்டி ஆரம்பிக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பேரணிக்கு ஆதரவு தெரிவித்தும் கடந்த காலத்தில் வடக்கு கிழக்கிலும் கடந்த 2009 இறுதிப்போரின்போதும் காணாமல்
போகச்செய்யப்பட்டும் கடத்தப்பட்டும் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டும் உள்ள உறவுகளின் சொந்தங்கள் திரண்டு நாளை கிளிநொச்சி கந்தசாமி கோவில் வளாகத்தில் காலை 9 மணி தொடக்கம் அடையாள உண்ணாவிரதத்தை நடாத்தவுள்ளன.
இதில் மனித உரிமை அமைப்புக்கள் மதகுருமார்கள் புத்திஜீவிகள் ஊடகவியலாளர்கள் மக்கள் பிரதிநிதிகள் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களை மற்றும் மனித உரிமை ஆர்வலர்களை பெருமளவில் திரண்டு ஆதரவு வழங்குமாறு காணாமல் போகச்செய்யப்பட்டவர்கள் மற்றும் சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளன.
No comments:
Post a Comment