எதிர்வரும் 08.03.2015 அன்று யேர்மனி தலைநகரில் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு சகல இன மக்களுடன் ஈழத்தமிழர்கள் நாமும் இணைந்து சிங்கள இனவெறி அடக்குமுறையின் ஆட்சியில் சொல்லனா துன்பங்களை அனுபவிக்கும் எமது உறவுகளான சகோதரிகளின்
அவலத்தை உலகுக்கு எடுத்துரைக்க ஒன்றுகூடுவோம் . சிங்கள இனவெறி அரசால் எமது உறவுகள் இன்றும் இழிவு வாழ்வில் தமது வாழ்க்கையை செலுத்துகின்றனர் .
இறுதி யுத்தத்தில் எமது சகோதரிகளுக்கு மிருகத்தனமான சிங்கள ராணுவம் செய்த கொடுமையை நாம் அனைவரும் நன்கறிவோம். தமிழ் பெண்கள் மீது சிங்கள அரசு முன்னெடுக்கும் பாலியல் வன்முறை ஈழத்தமிழர்களின் இன அழிப்பு வடிவங்களின் ஒரு வகையாகவே பார்கவேண்டும். ஆதலால் சர்வதேச பெண்கள் தினத்தை வலியுறித்தி உரிமைக்குரல் கொடுப்போம் வாருங்கள் .
தொடர்புகட்கு : தமிழ் பெண்கள் கூட்டமைப்பு – யேர்மனி
No comments:
Post a Comment