பசில் ராஜபக்சவும் கோத்தபாய ராஜபக்சவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இரு பக்கம் இருந்து இறுக்கியதாகவும் அவர் விரும்பிய பயணத்தை மேற்கொள்ள இவர்கள் இடமளிக்கவில்லை எனவும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்று வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.
சோதிடம் மீது தான் நம்பிக்கை இழந்து விட்டதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தமை குறித்து கருத்து வெளியிட்டுள்ள மேர்வின் சில்வா, சோதிடம் மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் தவறான மருத்துவரிடம் மருந்து எடுத்தால், மரணக்கவே வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்காதிருந்திருந்தால், தனது மகனை சிறையிலேயே கொன்றிருப்பார்கள் எனவும் தன்னை வெள்ளை வானில் கடத்தியிருப்பார்கள் எனவும் வெள்ளை வான் கலாசாரத்தின் ஸ்தாபகர் கோத்தபாய ராஜபக்ச எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மகிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவதை தான் விரும்பவில்லை எனவும் அவர் எதிர்வரும் தேர்தலில் போட்டியிட்டால் கண்டிப்பாக வெற்றி பெற முடியாது எனவும் மேர்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment