தமிழ்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சி ஜனநாயக
விரோதமாகவும், தன்னிச்சையாகவும், வன்முறையாகவும் நடந்து கொள்வது மிக மனவேதனையளிப்பதாக தமிழ்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்) மத்தியகுழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன், கூட்டுத்தலைமைகளால் உருவாக்கப்படும் வேலைத்திட்டங்களை மாத்திரமே இனிவரும் காலங்களில் தமது கட்சி முன்னெடுக்கும் என்றும் அறிவித்துள்ளது.
தமிழ்தேசிய கூட்டமைப்பை அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சியாக பதிவு செய்ய வேண்டுமென நீண்டகாலமாக கோரிவரும் சுரேஸ் பிரேமச்சந்திரனின் தலைமையிலான கட்சியின் மத்தியகுழு கூட்டம் நேற்று மட்டக்களப்பு வாவிக்கரை வீதியிலுள்ள கட்சியின் அலுவலகத்தில் நடந்தது. அங்கு எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்
தமிழ்தேசியத்தின் நலன்கருதி ஒன்றிணைக்கப்பட்ட தமிழ்கட்சிகளின் கூட்டமைப்பே தமிழ்தேசிய கூட்டமைப்பு. இந்த வகையில் தமிழ்தேசிய கூட்டமைப்பில் உள்ள கூட்டுத்தலைமைகள் கூடித் தீர்மானங்களை தீர்மானித்து அறிவிப்பதே ஜனநாயகமாகும். அல்லாவிடின் தமிழ்தேசியத்தின் நலனிற்கும், அதன் உரிமைகளிற்கான போராட்ட பாதைக்கும், அதன் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும் பங்கம் விளைவிப்பதாகவே அமையும்.
கூட்டமைப்பிலுள்ள ஒரு கட்சி கூட்டு முடிவெடுக்காமல் தனித்து செயற்பட்டதன் காரணமாக ஏற்பட்டுள்ள தவறுகளை சுட்க்காட்டியமைக்காக தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரான சுரேஷ் பிரேமச்சந்திரன் மீது அந்தக்கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் சுமத்தப்பட்ட கண்டனத் தீர்மானமானது இன்றைய சூழலில் எம்மத்தியில் மிக மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கிழக்கு மாகாண ஆட்சி, அமைச்சுப்பதவிகள் பகிர்ந்தளிக்கப்பட்ட முறைமைகள் தொடர்பிலும் தமிழ்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அந்தக்கட்சி ஜனநாயகத்திற்கு முரணாக வன்முறையாக செயற்பட்டமை தொடர்பிலும் மனவேதனை அடைகிறோம்.
தமிழ்தேசியத்தின் நலன்குறித்தும், ஆட்சிமாற்றத்தின் பின்னர் தமிழ்தேசிய கூட்டமைப்பு முன்னெடுத்து வரும் தமிழ்மக்களின் அரசியல்தீர்வு குறித்த நடவடிக்கைகளையும் தமிழர்களின் உரிமைகள், அபிலாசைகள், இயல்புவாழ்க்கை, புனர்வாழ்வு நடவடிக்கைகள், அதிகாரப்பங்கீடு குறித்த கருத்திட்டங்களிற்கு உணர்வுபூர்வமாகவும், ,தயசுத்தியோடும், மனஉறுதியோடும் நாம் எமது வேலைத்திட்டங்களை காலத்தின் தேவை அறிந்து கூட்டுத்தலைமைகளால் மட்டும் உருவாக்கப்படும் வேலைத்திட்டங்களை மட்டும் முன்னெடுப்போமென குறிப்பிடப்பட்டுள்ளது

No comments:
Post a Comment