யாழ்.குடாநாட்டில் தங்கியிருந்து தொழிலில் ஈடுபட்டு வந்த தென்னிலங்கையை சேர்ந்த விலைமாது ஒருவரும், இலங்கையின் தொண்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் உட்பட்ட
மேலும் 5 நபர்களும் இன்று யாழ்.நகரில் பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
அண்மைக்காலமாக யாழ்.குடாநாட்டில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த விலைமாதுக்களின் நடமாட்டம் அதிகாரித்துள்ளது. இந்நிலையில் யாழ்.குருநகர் பகுதியில் நேற்றைய தினம் இரவு ஒரு பெண் வீதியில் நீண்டநேரம் தனித்திருப்பதை கண்ட ஊர் மக்கள், விடயம் தொடர்பாக பொலிஸாருக்கு வழங்கிய தகவல்களின் அடிப்படையில் குறித்த பெண் கை து செய்யப்பட்டார்.
இந்நிலையில் குறித்த பெண் தென்னிலங்கையை சேர்ந்தவர் எனவும் அவர் இங்கு தங்கியிருந்து தொழில் செய்யும் விலைமாது என்பதும் தெரியவந்துள்ளது.
எனினும் அவருடைய பின்புலம், தொடர்பாக அறிவதற்காக பொலிஸார் அவருடைய தொலைபேசியை தொடர்ந்தும் இயங்க அனுமதித்த நிலையில் இன்றைய தினம் காலை தொலைபேசி அழைப்பு ஒன்று கிடைத்துள்ளது.
அதில் தாம் யாழ்.போதனா வைத்தியசாலையில் காத்திருப்பதாகவும் வரும்படியும் கூறியிருக்கின்றனர். இதனையடுத்து, குறித்த பெண்ணை போகவிட்ட பொலிஸார் பின்தொடர்ந்து சென்று காத்திருந்தவர்களை சுற்றி வளைத்துப் பிடித்துள்ளனர்.
No comments:
Post a Comment