இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் சிறிலங்காவுக்கான இரண்டு நாள் பயணத்தை இன்று பிற்பகல் ஆரம்பித்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையத் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சருடன், இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கரும், சிறிலங்கா பயணத்தில் இணைந்து கொண்டுள்ளதாக, அவர் தனது ருவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இன்று இந்தியாவில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
எனினும், இந்திய இராஜதந்திரத்துக்கு ஹோலி விடுமுறை நாள் அல்ல என்றும் அவர் அதில் கூறியுள்ளார்.
அண்மையில் இந்திய வெளிவிவகாரச் செயலராக நியமிக்கப்பட்ட பின்னர், எஸ்.ஜெய்சங்கர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வது இது வே முதல்முறையாகும்.
அவர், 1988-90 காலப்பகுதியில், சிறிலங்காவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் இந்திய அமைதிப்படையினருக்கான அரசியல் ஆலோசகராகப் பணியாற்றியிருந்தார்.

No comments:
Post a Comment