March 6, 2015

30வது நாளாக மாவீரர் கனவை சுமந்து செல்கின்றது விடுதலைச் சுடர்!

04.02.2015 அன்று தாயக விடுதலையைச் சுமந்து பிரித்தானியாவில் ஆரம்பமான விடுதலைச் சுடர் நிகழ்வு 05.03.2015 அன்று 30வது நாளாக Nordrhein-Westfalen மாநிலத்தில் உள்ள பிலபேல்ட் (Bielefeld) நகரத்தை வந்தடைந்துள்ளது.


விடுதலைச் சுடர் பிலபேல்ட் (Bielefeld) நகரத்தில் உள்ள யான்பிலட்ஸ் (Jahnplatz) என்னும் இடத்தில் 10:00 மணிக்கு சிவாஜிலிங்கம் ஐயா அவர்கள் அகவணக்;கத்துடனும் உரையுடனும் இன்றைய நிகழ்வை ஆரம்பித்தார். அதன்பிற்பாடு தமிழின அழிப்பையும் மறுக்கப்பட்ட தமிழர்களின் நீதியை யேர்மனிய மக்களுக்கும் வேற்றின மக்களுக்கு தெளிவுப்படுத்தும் வகையில் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது.


12:30 மணிக்கு நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நிறைவடைந்ததை தொடர்ந்து மதியம் பிலபேல்ட் (Bielefeld) நகரத்தில் சிவாஜிலிங்கம் ஐயா அவர்களுடன் மக்கள் சந்திப்பு இடம்பெற்றது.


பிலபேல்ட் (Bielefeld) நகரத்தில் கவனயீர்பு நிகழ்வு நிறைவடைந்ததும் டோர்ட்மூன்ட் (Dortmund) நகரத்திற்கு இன்று 15:30 மணிக்கு சென்று அகவணக்கத்துடன் நிகழ்வுகளை ஆரம்பித்து டோர்ட்மூன்ட் (Dortmund) நகரத்தில் தமிழின அழிப்பையும் மறுக்கப்பட்ட தமிழர்களின் நீதியை யேர்மனிய மக்களுக்கும் வேற்றின மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது.

விடுதலைச் சுடர் 06.03.2015 நாளை அன்று போகும் (Bochum) நகரத்தை வந்தடையும். அன்றைய தினம் அனைத்து தமிழ் மக்களையும் கலந்து கொள்ளுமாறு உரிமையுடன் வேண்டுகின்றோம்.



No comments:

Post a Comment