ஹற்றனில் ஒரு அரச வங்கி ஒன்றில் 20,000 காசு மீளப்பெற வந்த ஒரு வயதான பெண்ணை ஏமாற்றி வங்கிக்குள்ளே அந்த பணத்தை மோசடி செய்த சந்தேகநபரை தேடி ஹற்றன் பொலிஸார் வலைவிரித்துள்ளனர்
ஹற்றன் பிரதான வீதியில் உள்ள இந்த அரச வங்கியில் குறித்த பெண்ணுக்கு காசு மீளப்பெற தெரியாததன் காரணமாக மேற்படி வங்கியில் இருந்த ஒரு இளைஞர் ஒருவரிடம் உதவி கேட்டுள்ளார்.
குறித்த இளைஞர் பணம் மீளப்பெறும் பற்றுச்சீட்டினை நிரப்பி குறித்த பெண்ணிடம் கையொப்பம் வாங்கி வங்கியில் பணத்தை பெற்றுக்கொண்டவுடன், பணத்தை உரிய வயோதிப பெண்ணிடம் கொடுக்காது வங்கியிலிருந்து தப்பி ஓடியுள்ளதாக ஹற்றன் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் தன்னுடைய சேமநல நிதியிலிருந்து வீட்டு தேவைக்காக 20,000 ரூபா மீளப்பெற வந்த வேளையிலேயே இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.
இன்று 3.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தை பற்றி குறித்த வங்கியின் முகாமையாளரிடம் கேட்டபோது அவர் தெரிவித்ததாவது,
இச்சம்பவம் உண்மை எனவும், இந்த வங்கியில் கண்காணிப்பு கமரா இல்லாத காரணத்தினால் அவரை அடையாளம் காண முடியவில்லை என தெரிவித்தார்.
அத்துடன், வாடிக்கையாளர்கள் அதிகளவில் வரும் இந்த வங்கிக்கு கண்காணிப்பு கமரா வேண்டும் என உயர் அதிகாரிகளுக்கு பல முறை தெரிவித்திருந்த போதிலும் அவர்கள் இந்த விடயத்தில் அசமந்த போக்கை காட்டி வருவதாகவும் இதனால் மீண்டும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment