குறித்த மாணவர் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்தார்
என அவரது பெற்றோரினால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் வலஸ்பெத்த தமிழ் மகா வித்தியாலயத்தில் 10ஆம் தரத்தில் கல்வி பயிலும் விஷ்வமூர்த்தி சத்தியாதரன் என்ற 15 வயதுடைய மாணவன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சடலம் மீட்கப்பட்ட இடத்திலிருந்து சந்தேகத்திற்கிடமாக சீமெந்து உறை ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக பதுளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment