தற்போது பிரித்தானியாவிற்கு விஜயம் செய்துள்ள மைத்திரிபால சிறிசேன, இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். இலங்கையில் காணப்படும் அரசியல் கலாச்சாரத்திற்கு அமைய தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக்
கட்சியின் பிரித்தானிய கிளைக் குழுவினருடன் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. தாம் ஓர் பொது வேட்பாளர் எனவும் தாம் அனைவருக்கும் சொந்தமானவர் எனவும் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு தனித் தரப்பிற்கும் விசேடமாக சலுகைகளை வழங்கவோ ஒரு தரப்பினை ஒடுக்குமுறைக்கு உட்படுத்தவோ போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஏதேனும் ஒர் விடயம் பிழையாக போயிருந்தாலும், வாழ்க்கையில் மிகப் பாரதூரமான பாதிப்புக்களை அனுபவிக்க நேரிட்டிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில காலங்களில் கிடைக்கப்பெற்ற வாய்ப்புக்கள் உரிய முறையில் பயன்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். 2004ம் ஆழிப்பேரலை அனர்த்தம், 2009ம் ஆண்டு பயங்கரவாதத்திற்கு எதிரனா வெற்றி என பல்வேறு சந்தர்ப்பங்கள் கிடைக்கப்பெற்ற போதிலும் நாம் இந்த சந்தர்ப்பங்களை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார். 2015ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் கிடைக்கப் பெற்ற வெற்றியை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகள் தொடர்ந்தும் சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தால் இன்னும் பத்து ஆண்டுகளில் நாட்டில் மீண்டும் ஒர் யுத்தம் ஏற்படுதவனை தவிர்க்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். ராஜதந்திர சேவை மறுசீரமைக்கப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். ராஜதந்திர பதவிகள் நண்பர்களுக்கான பரிசாக வழங்கப்பட்டு வந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment