கிளிநொச்சி முறிப்பு பகுதியில் சடலம் ஒன்று இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, கோணாவில் கிழக்கு பகுதியை சேர்ந்த மாசிலாமணி சிறீகுமார் என்ற, 51 வயதுடைய 5 பிள்ளைகளின்
தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளாா்.
குறித்த சடலம், முறிப்பு குளத்தில் தாண்டிருந்த நிலையில் பிரதேச மக்களால் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை 3 மணிமுதல் குறித்த நபரை காணவில்லை என உறவினர்கள் தேடப்பட்ட நிலையில் குறித்த நபர் கொண்டு வந்திருந்த பையை அடையாளம் கண்ட சிலர் குளத்தில் நீராட சென்ற வேளை இறந்திருக்கலாம் எனும் சந்தேகத்தில் தேடியுள்ளனர்.
தேடுதலின்போது குறித்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment