February 4, 2015

யுத்தகுற்ற விசாரணை அறிக்கையை தாமதப்படுத்த கோரவில்லை – சிறிலங்கா

சிறிலங்காவுக்கு எதிரான யுத்தகுற்ற விசாரணை அறிக்கையை காலம் தாழ்த்துமாறு சிறிலங்கா அரசாங்கம் கோரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜெனீவாவில் உள்ள சிறிலங்காவின் தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரை சிறிலங்கா ஜனாதிபதியின் பிரதிநிதி ஜயந்த தனபால சந்தித்திருந்தார்.

இது புதிய அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்த விளக்கமளிப்புகளை மேற்கொள்ளும் நோக்கிலேயே இடம்பெற்றிருந்தது.

எனினும் இதன் போது எதிர்வரும் மார்ச் மாதம் முன்வைக்கப்படவுள்ள விசாரணை அறிக்கையை பிற்போடுமாறு கோருவதற்காக இல்லை என்று தூதகரத்தின் தகவல்களை மேற்கோள் காட்டி ஆங்கில பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment