வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினில் 1000 ஏக்கர்
காணியில் எதிர்வரும் மூன்று கிழமைக்குள் மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்படவுள்ளதாகவும் அத்துடன் வளலாய் மாதிரி கிராம திட்டம் கைவிடப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசின் மீள்குடியேற்ற விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அவர் ஆளுநர் மற்றும் முதலமைச்சரென பலரையும் சந்தித்துப்பேச்சுக்களை நடத்தினார்.பின்னர் ஊடகவியலாளர்களிடையே பேசிய சுவாமிநாதன் முதல்;கட்டமாக ஆயிரம் ஏக்கர் விடுவிக்கப்படுமெனவும் அப்பகுதிகள் எவையென்பது விரைவினில் அறிவிக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக வளலாய் பகுதியில் மக்கள் வாழ தகுதியற்ற தரவையினில் முகாம்களினில் தங்கியுள்ள மக்களை குடீயேற்றும் திட்டமா? இதுவென எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் அது வைவிடப்பட்டு விட்டதாகவும் இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த மண்ணிலேயே மீள்குடியேற்றப்படுவார்களெனவும் தெரிவித்தார்.
|
No comments:
Post a Comment