இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து நடிகர் சல்மான்கான் இலங்கைக்கு வந்து பிரச்சாரம் செய்தார். இதற்கு தமிழ் அமைப்புகள் கண்டனம்
தெரிவித்தன. மேலும், மும்பையில் உள்ள சல்மான்கான் வீட்டை முற்றுகையிட்டு தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், நாங்கள் எங்களது இதயத்தில் இருந்து சல்மான்கானை நீக்கிவிட்டோம். அவர், தமிழ் மக்களின் உணர்வுகளை பற்றி நினைக்கவில்லை. அவர் இலங்கை செல்லக் கூடாது. சல்மான்கான் மன்னிப்பு கேட்கும் வரையில் போராட்டம் நடத்துவோம் என்றனர்.
போர் குற்றவாளி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்த சல்மான்கானுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறோம் என்ற வாசகம் எழுதி பேனர்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டம் காரணமாக சல்மான்கான் வீட்டு முன்பு பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் என தமிழக ஊடகமான நக்கீரன் குறிப்பிட்டுள்ளது.

No comments:
Post a Comment