சிறீலங்காவின் எட்டாவது ஜனாதிபதியை
தெரிவுசெய்யும் தேர்தலில் எத்தகைய கோரிக்கைகளும் நிபந்தனைகளும் இன்றி, பொது
எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக தமிழ்
தேசியக்கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக
இலங்கைத்தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணிச்செயலாளர் வி.எஸ்.சிவகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தமை தெரிந்ததே.
இந்த அதிரடி அறிவிப்பால் உலகத்தமிழர்கள் பலருடைய கவனத்தையும், ஆதரவையும் இளைஞர் அணி பெற்றிருக்கிறது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் குறித்த முடிவால் கடும் அதிருப்தியும், வேதனையும், கோபமும் அடைந்துள்ள இளைஞர் அணிச்செயலாளர் வி.எஸ்.சிவகரன், இலங்கைத்தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு,
“நாங்க உங்கள தமிழரசுக்கட்சியின்ட தலைவரா வேலை பார்க்க தெரிவு செஞ்ஞோமே ஒழிய, சுமந்திரனுக்கு ‘பீஒன்’ (peon) வேலை பார்க்க தெரிவு செய்யேல்ல.” என்று கடுமையாக சாடியுள்ளார்.
இதன்பின்னரே சிவகரன் கூட்டமைப்பின் முடிவை எதிர்க்கும் இளைஞர் அணியின் முடிவை ஊடகங்கள் வாயிலாக தெரியப்படுத்தியதாக நம்பகரமாக அறியக்கிடைக்கின்றது.
தொடர்ந்துகொண்டிருக்கும் இலங்கைத்தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணியின் கடும் தாக்குதல்களால் நிலைகுலைந்துபோயுள்ள மாவை.சேனாதிராசா, கூட்டமைப்பின் முடிவை எதிர்த்து ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து தனக்கு நெருக்கடிகொடுத்துவரும் திருமதி அனந்தி சசிதரன், ரவிகரன் போன்றவர்களுடன் கடுமையாக நடந்துகொள்வதாக தெரியவருகின்றது.

No comments:
Post a Comment