எதிர்வரும் எட்டாம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில்
தமிழ் மக்களின் வாக்குகள் நிட்சயம் தனக்கே கிடைக்கும் என்று
சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பகிரங்கமாக அறிவித்துள்ள நிலையிலேயே மஹிந்த இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கவில்லை என்பதால் தமிழ் மக்களும் அரசாங்கத்துடன் இல்லை என அர்த்தப்படாது என்றும் அவர் இன்றைய தினம் வாராந்த பத்திரிகைளுக்கு அளித்துள்ள செவ்வியில் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போன்ற தமிழ் அரசியல் தலைவர்கள் தம்முடன் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், முதன்முறையாக வன்னியிலிருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவர்கள் தற்போது தமிழ் மக்களின் வாக்குகளை தனக்கு பெற்றுக் கொடுப்பதற்கு களத்தில் இறங்கித் தீவிரமாக பிரசாரம் செய்து வருவதாகவும் தெரிவிக்கும் அவர், தான் வடக்கில் மேற்கொண்டுள்ள பாரிய அபிவிருத்தித் திட்டங்களும் தமிழ் மக்கள் தனக்கு ஆதரவுவழங்கப் பிரதான காரணமாக அமையும் என்றும் கூறுகின்றார்.
குறிப்பாக கைவிடப்பட்டிருந்த யாழ் தேவி ரயில் சேவையை மீண்டும் ஆரம்பித்தமை, 400 பில்லியன் ரூபா செலவில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை வடக்கில் முன்னெடுத்துள்ளமை காரணமாக தமிழ் மக்கள் தன் மீது நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு தமிழ் மக்கள் குறித்தோ, நாடு குறித்தோ அக்கறை இல்லை என்று குற்றம்சாட்டியுள்ள அவர், அதனாலேயே அரசியல் தீர்வு விடையத்தில் அவர்கள் அக்கறையின்றி இருப்பதாகவும் சாடியுள்ளார்.
அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜெனீவா ஊடாக அரசியல் தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கொண்டு காத்திருப்பதாகவும் கூறும் அவர், அரசியலில் தொடர்ந்து நிலைத்திருப்பதற்காகவே நிரந்தர அரசியல் தீர்வு விடையத்தில் அவர்கள் அக்கறையின்றி இவ்வாறு இழுத்தடிப்புச் செய்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
அதேவேளை வெளிநாடுகளிலிருந்து தொடர்ந்தும் சிறிலங்காவிற்கு பயங்கரவாத அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாகவும், அதனாலேயே ஓமந்தையில் சிறப்புப் புலனாய்வு அதிகாரிகளை நிறுத்தி வெளிநாட்டவர்கள் தொடர்பில் கண்காணித்து வருவதாகவும் சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இராணுவத்தைக் கொண்டு இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வடபகுதி தமிழ் மக்கள் பெருமளவில் வாக்களிப்பதை தடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் சதித்திட்டம் தீட்டிவருவதாக எதிர்கட்சிகளும், தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

No comments:
Post a Comment