தமது குடும்பத்தினர் பாதுகாப்பு படையினரால் தொந்தரவுகளுக்கு உட்படுத்தப்படுவதாக அம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
பொலிஸார் பல்வேறு ஊகங்களின் அடிப்படையில் தமது நண்பர்களின் வீடுகளையும் சோதனையிடுகின்றனர்.
எனினும் இதுவரை எதனையும் கண்டுபிடிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது குடும்பம் தேவையற்ற வகையில் தொந்தரவுகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
“கார்ல்டன் ஹவுஸ்” சோதனையிடப்பட்ட போது அங்கு சீ பிளேன் இருப்பதாகவும் லம்போகினி காரின் டயர்கள் இருப்பதாகவும் கூறப்பட்டது.
எனினும் அங்கிருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதேவேளை தமது வீடு சோதனையிடப்பட்ட போது அது தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment