ஜனாதிபதி மைத்திரியின் ஆட்சியில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை என சிவில் விமான சேவைகள் ராஜாங்க அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
இன்று காலை அமைச்சர் பைசர் முஸ்தபா தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
சிவில் விமான சேவைகள் அமைச்சின் கீழ் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் ஆட்சியில் ஊழலுக்கு மோசடிகளுக்கோ, குடும்ப ஆட்சிக்கோ பழிவாங்கலுக்கோ இடமிருக்காது.
ஆனால் கடந்த காலத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டோருக்கான தண்டனை பெற்றுக் கொடுக்க தயங்க மாட்டோம்.
மத்தள விமான நிலையம் நஷ்டத்தில் இயங்குவதால் அதனை மூடிவிடும்படி விமான சேவைகள் அதிகார சபை உத்தரவிட்டுள்ளது.
இதன் முழு விபரமும் எதிர்காலத்தில் பகிரங்கப்படுத்தப்படும். அத்துடன் அமைச்சில் எனது உறவினர் எவருக்கும் இடமளிக்கமாட்டோம் என்பதை உறுதியாக சொல்லிக் கொள்கிறேன் என்றார்.
No comments:
Post a Comment