ஆனைக்கோட்டை கூழாவடி பகுதியில் பொதுமக்களின் காணிகளில் அமைந்துள்ள இராணுவ முகாமை நிரந்தரமாக அகற்றி, காணிகளை உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்று போராட்டம் ஒன்றை நடத்தியது.
ஆனைக்கோட்டை கூழாவடி பகுதியில் பொதுமக்களின் காணிகளில் அமைந்துள்ள இராணுவ முகாமை நிரந்தரமாக அகற்றி, காணிகளை உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்று போராட்டம் ஒன்றை நடத்தியது.
சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஜே - 133 கிராம அலுவலர் பிரிவை (கூழாவடி) சேர்ந்த 5 பேரின் 0.3492 ஹெக்டேயர் காணிகள், இலங்கை இராணுவத்தின் 11ஆவது சிங்க ரெஜிமென் 'பி' அணிக்கான நிலையத்தை நிர்மாணிப்பதற்காக சுவீகரிக்கப்பட்டு, இன்று இராணுவத்துக்கு வழங்கப்படவுள்ளதாக காணி உரிமையாளர்களுக்கு கடந்த 7ஆம் திகதி சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தால் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
மரியாம்பிள்ளை சிங்கராசா, சுப்பிரமணியம் தம்பித்துரை, யேசுராசா விக்டோறியா, இராயப்பு யேக்கப்பு, அம்பலவாணர் சிறி ஆகியோரது காணிகளே இவ்வாறு சுவீகரிக்கப்படவிருந்தன.இந்த சுவீப்கரிப்பு நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்தும்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்ததின் பிரகாரம், காணி சுவீகரிப்பு நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் நிரந்தரமாக இந்தப் படைமுகாம் மூடப்பட்டு, காணிகள் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட காணி உரிமையாளர் ஒருவரான கருத்து தெரிவிக்கையில், "எனது 4 பரப்பு காணி இப்பகுதியில் உள்ளது. 3 ½ பரப்பளவு காணி இராணுவ முகாமுக்குள் உள்ளது. ½ பரப்பு காணி மாத்திரமே வெளியில் இருக்கின்றது. இது தொடர்பில் இராணுவ முகாம் தலைமை அதிகாரிக்கு பல தடவைகள் தெரியப்படுத்தியபோது, கடிதம் தருமாறு அவர் கோரி, கடிதம் வழங்கி ஒரு வருடம் ஆகியும் இதுவரையில் ஆக்கபூர்வமான பதில் எதுவும் எமக்கு கிடைக்கவில்லை.
இராணுவ அதிகாரி இராணுவ முகாம் அமைக்கப்படாத ½ பரப்புக் காணியில் குடிசை அமைத்து இருக்கும்படி கூறினார். அந்த ½ பரப்பில் மலசலகூடம் கூட கட்டமுடியாது. அதில் எவ்வாறு குடிசை அமைப்பது. பெருமளவு பணம் கொடுத்து வாங்கிய காணியை விட்டு, வாடகை வீட்டில் தற்போது தங்கியிருக்கின்றேன். எனது காணியின் 3 ½ பரப்பை இராணுவத்துக்கு கொடுத்துவிட்டு, ½ பரப்பில் குடிசை அமைத்து இருக்கச் சொல்லும் எமது நமது நாடு பற்றி எமக்கு விளங்கவில்லை எனக்கூறினார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
|
No comments:
Post a Comment