January 21, 2015

ஐதேக எம்பி பாலித தெவரப்பெருமவை விளக்கமறியலில்!!

அகலவத்தை நகரில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதேச சபை உறுப்பினரான ஆறுமுகம் புஸ்பகுமார் என்பவரை முழங்காலில் நிற்கவைதது தாக்கிய சம்பவம் தொடர்பாக ஐக்கிய தேசியக்
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும எதிர்வரும் 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அகலவத்தை நகரில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதேச சபை உறுப்பினரான ஆறுமுகம் புஸ்பகுமார் என்பவரை முழங்காலில் நிற்கவைதது தாக்கிய சம்பவம் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும எதிர்வரும் 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும இன்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் வாக்குமூலம் ஒன்றை வழங்கியதையடுத்து கைது செய்யப்பட்டார். இதனையடுத்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

No comments:

Post a Comment