January 24, 2015

அனுராதபுரம் சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் மீது சிங்களவர்கள் தாக்குதல்!!

அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மீது சிங்கள கைதிகள் தாக்குதல் நடத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் 9 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் கடந்த சனிக்கிழமை முதல், கொலைக்குற்றவாளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அரசியல் கைதிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment