January 24, 2015

சுன்னாகத்தில் தொடரும் பட்டினிப்போராட்டத்துக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது பூரண ஆதரவை வழங்கிவருகின்றது.!









தற்போது மின் உற்பத்தி நிலையம் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் மேலும் பல முக்கிய பிரச்சினைகள் உள்ளன. பாதிக்கப்பட்ட
மக்களுக்கு உடனடியாக சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுக்க உறுதி செய்யவேண்டும். பாதிப்புக்களில் இருந்து நிரந்தரமாக மீள்வதற்குரிய பொறிமுறையை உருவாக்கவேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளை அனர்த்தவலயமாக அறிவிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பில் தமக்கு எழுத்துமூல உறுதிமொழி வழங்கப்படவேண்டும். இல்லையேல் தமது போராட்டம் மேலும் வலுவடையும் என பட்டினிப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment