கடந்த 31ம் திகதியே 4 ஆடம்பர கார்களை வெளிநாட்டுக்கு ஏற்றப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தகவல் வெளியிட்டுள்ளார்.
தேர்தலில் தோல்வி நிச்சயம் என்பதை அறிந்து கொண்டுள்ள ராஜபக்சவினர் தமது புதல்வர்கள் பயன்படுத்தும் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான ஆறு பந்தயக் கார்களை வெளிநாடு ஒன்று அனுப்பியது.
தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ள ராஜபக்சவின் அடிவருடிகள் தமது பெறுமதியான ரேஸ் பந்தய கார்களை யாருக்கும் தெரியாமல் வெளிநாட்டுக்கு அனுப்பியமை யாவரும் அறிந்தது.
இந்த நிலையில் மிகுதியாக இருந்த இறுதிக் கட்ட ரேஸ் கார்களை 04.01.2015 மாலை கட்டநாயக்கா விமானநிலையம் ஊடாக அனுப்பிவைத்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை ஜனாதிபதி தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப் படம் நிலையில் ஆதாரங்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன.
No comments:
Post a Comment