January 1, 2015

வடக்கு மக்கள் வாக்களிப்பதைத் தடுக்க 2000 இராணுவம்!

வடமாகாணத்தில் உள்ள மக்களை வாக்களிக்கவிடாமல் தடுப்பதற்காக 2000க்கும் அதிகமான இராணுவத் துருப்பினர்களை சிவில் உடையில்
அரசாங்கம் ஈடுபடுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.

தாம் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது, இவ்வாறான விடயத்தை அவதானித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இராணுவத்தை பயன்படுத்தி அரசாங்கம் வாக்களிப்பை குழப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பொலனறுவை, அனுராதபுரம் போன்ற மாவட்டங்களிலும் அதிக அளவான இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment