November 26, 2014

தலைவர் பிரபாவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுவலகம் தீவிர கண்காணிப்பிற்குள்!

தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுவலகம் தீவிர கண்காணிப்பிற்குள்ளாக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகம் இன்று பி.ப 4.00 மணி தொடக்கம் ஸ்ரீலங்கா இராணுவ உளவுத் துறையினரது தீவிர கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. அலுவலக வாயிலில் சிவிலுடையில் பல உளவுத் துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். அதனால் அலுவலகத்தை அண்டியிலுள்ள குடியிருப்பாளர்கள் மத்தியில் பதற்ற நிலை உருவாகியுள்ளது. அப்பகுதியில் குடியிருப்பவர்களிடம் கூட தேவைகளுக்காக பொது மக்கள் செல்வதற்கு அஞ்சுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment