October 25, 2014

சுப்ரமணியன் சுவாமியின் அரசியல் சூழ்ச்சி அம்பலம்!

சுப்ரமணியன் சுவாமியின் அரசியல் சூழ்ச்சி வெற்றியளித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனதா கட்சியின் தலைவரான சுப்ரமணிய சுவாமி தொடர்பில் தமிழ் நாட்டில் மோசமான கருத்து
நிலவுகிறது. சிறிலங்காவின் யுத்தக் குற்றங்களுக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு சிறிலங்காவுடன் நட்புறவில் ஈடுபட்படுள்ள அவரை தமிழ் நாட்டு மக்கள் விமர்சித்து வருகின்றனர்.
அவருக்கு தமிழகத்தின் அரசியலில் இடமில்லாமல் இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் தமக்கான அந்தஸ்த்தை பெற்றுக் கொள்ளும் வகையில், சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து அவர் சூழ்ச்சிகளை மேற்கொண்டிருந்தார். இதன்படி தமிழக மீனவர்களின் படகுகளை சிறிலங்காவில் தடுத்து வைக்குமாறும், பின்னர் இந்த படகுகளை தாம் தலையிட்டு விடுவித்து தருவது போன்ற ஒருநாடகம் அரங்கேற்றப்பட்டது.
இதில் ஓரளவுக்கு சுப்ரமணியன் சுவாமி வெற்றிப் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இதுநாள் வரையில் தமிழகத்தின் அரசியல் தலைவர்களை சந்தித்து படகுகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி வந்த தமிழக மீனவர்கள் நேற்றையதினம் சுப்ரமணியன் சுவாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றனர்.
இதன் போது தாம் குறித்த படகுகளை விடுவிக்க மகிந்தராஜபக்ஷவுடன் கலந்துரையாடுவதாக சுப்ரமணியன் சுவாமி உறுதியளித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தையின் போது படகுகள் விடுவிக்கப்படும் பட்சத்தில், சுப்ரமணியம் சுவாமிக்கு அது மிகப்பெரிய வெற்றியாக அமையும்.

No comments:

Post a Comment