அன்பிற்கும் மதிப்பிற்குரிய தமிழ் உறவுகளுக்கு எமது எழுச்சிகரமான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமிழ் இளையோர்களின் பங்கு அளப்பெரியதாக திகழ்கின்றது. குறிப்பாக 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழின அழிப்பிற்கு பிற்பாடு உலகெங்கும் உள்ள தமிழ் இளையோர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம்மை முழுமையாக அர்பணித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
தமிழீழத்தில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பிற்கு நீதி வேண்டி தமிழகத்தில் இடம்பெற்ற போராட்டங்களுக்கு அடிநாதமாக திகழ்ந்ததமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செம்பியன் , தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், மற்றும் மாற்றம் மாணவர் இளையோர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரதீப் ஆகியோரை 23.10.2014 அன்று அதிகாலை 02:00 மணிக்கு காவல்துறையினர் பொய் வழக்கில் கைது செய்துள்ளனர்.
எமது மாணவச் சகோதர்களை பொய் வழக்கில் கைது செய்துள்ளமையை வன்மையாக கண்டிப்பதோடு அவர்களுடைய நியாயமான உணர்வுகளை மதித்து அவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டுமென தமிழ் இளையோர் அமைப்பினர் ஆகிய நாம் வேண்டி நிற்கின்றோம்.
இவ்வண்ணம்
தமிழ் இளையோர் அமைப்பு - யேர்மனி
http://tyo-germany.com/
https://www.facebook.com/TamilYouthOrganisationGermany

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
இவ்வண்ணம்
தமிழ் இளையோர் அமைப்பு - யேர்மனி
http://tyo-germany.com/
https://www.facebook.com/TamilYouthOrganisationGermany
No comments:
Post a Comment