தமிழ்த்
தேசிய உணர்வோடு , தமிழின நலனுக்காக , தம்மை இரவு பகலாக அர்ப்பணித்து
தமிழகத்தில் பல போராட்டங்களை மேற்கொண்ட
மாணவத்தலைவர்களை நேற்று 23.10.2014 அதிகாலை 2 மணிக்கு காவல்துறை பொய் வழக்கில் கைது செய்துள்ளது.
மாணவத்தலைவர்களை நேற்று 23.10.2014 அதிகாலை 2 மணிக்கு காவல்துறை பொய் வழக்கில் கைது செய்துள்ளது.
கைது
செய்யப்பட்டவர்கள் தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பின் தலைமை
ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின்
ஒருங்கிணைப்பாளர் செம்பியன் மற்றும் மாற்றம் மாணவர் இளையோர் அமைப்பின்
பிரதீப் ஆகியோர் ஆவார்.
முள்ளிவாய்க்கால்
தமிழின அழிப்புக்கு பின்னர் 2009 ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக இன்றுவரை
ஈழத்தமிழர்களின் இன அழிப்புக்கு எதிராக தமது குரலை ஓங்கி ஒலிக்க
செய்தவர்களில் மாணவர்கள் ஆகிய இவர்களின் பங்கு அளப்பரியது . எவ்வித
அரசியல் பின்னணியும் இல்லாத முறையில் பல்வேறு போராட்டங்களை ஒருங்கிணைத்து
செய்ததுடன் , உலகமே அதிர்ந்திட தமிழகத்தில் நடைபெற்ற மாபெரும்
போராட்டத்துக்கு அடிநாதமாக விளங்கியவர்களும் இவர்களே.
மாணவர்களின்
நியாயமான உணர்வுகளை மதித்து அவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்
என்பதை அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை ஆகிய நாம் வேண்டி நிற்கின்றோம்.
No comments:
Post a Comment