August 24, 2014

வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!

வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவரை வெலிஅத்த பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் வரும் வேலை வாய்ப்புக்களை அவரது செயலாளர் மூலம் பெற்றுத் தருவதாகக் கோரியே இவர் மோசடி செய்துள்ளார்.

வெலிஅத்த பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

39 வயதான குறித்த சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக தங்காலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment