August 24, 2014

தமிழர்கள் வாழ்வில் மகிழ்ச்சி மலரும் நாள் கனிந்து வருகிறது - தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்!

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தன் மூலம் தமிழர்கள் வாழ்வில் மகிழ்ச்சி மலரும் நாள் கனிந்து வருகிறது என தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் கூறியதாவது,

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண பா.ஜனதா அரசு மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. அவர்களுக்கு முழு அரசியல் அதிகாரம் கிடைக்க எந்தெந்த வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் வரவேற்போம்.

அந்த நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியுறவுத்துறை செயலர், வெளியுறவுத்துறை மந்திரி மற்றும் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசி இருக்கிறார்கள்.

இலங்கை தமிழர்களுக்கு ஆட்சி அதிகாரத்துடன் கூடிய மறுவாழ்வு திட்டங்கள் மீட்டெடுக்கப்படும் என்று நமது வெளியுறவுத்துறை செயலர் கூறி இருக்கிறார். இதை தான் சுஷ்மா சுவராஜூம் கூறினார்.

தற்போது இலங்கை எம்.பி.க்கள் மோடியை சந்தித்தன் மூலம் தமிழர்கள் வாழ்வில் மகிழ்ச்சி மலரும் நாள் கனிந்து வருகிறது. விரைவில் தமிழர்கள் சுயகௌரவத்துடன் தலை நிமிர்ந்து வாழ்வார்கள். அதற்கான எல்லா முயற்சிகளையும் மோடி அரசு மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment