மருதானை CSR மண்டபத்தில் காணாமல்போனோரின் உறவினர்கள் கலந்துகொண்ட கூட்டமொன்றினுள் புகுந்த பிக்குகள் தலைமையிலான குண்டர் குழுவொன்று
, அமெரிக்காவின் பணம் பெற்றுக்கொள்ளும் தேசத்துரோகிகள் எனக் கூறி கூட்டத்தை உடனடியாக நிறுத்தும்படி கூறியுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் அமெரிக்க, பிரித்தானிய, ஐரோப்பிய ஒன்றிய, சுவிஸ் தூதரகங்களைச் சேர்ந்த இராஜதந்திரிகளும் கலந்துகொண்டிருந்தனர். உடனடியாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளும் அவ்விடத்துக்கு வந்துள்ளனர்.
மண்டபத்தினுள் புகுந்தவர்கள், ஏற்பாட்டாளர்கள், காணாமல்போனோரின் உறவினர்கள், இராஜதந்திரிகளை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். காணாமல்போனோரின் உறவினர்களுள் புலிகளின் மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் இருக்கின்றனர் என பிக்குகள் கூச்சலிட்டுள்ளனர்.
கமராக்களுடன் வந்திருந்த குண்டர்கள் காணாமல்போனோரின் உறவினர்களை படம் பிடிக்கவும் தவறவில்லை. சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், காணாமல்போனோரின் உறவுகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாதென தெரிவித்துள்ளனர். அதனால், உடனடியாக இங்கிருந்து செல்லுமாறு பொலிஸாரும் தெரிவித்துள்ளனர். இதன் பின்னர் கூட்டத்தை இடைநிறுத்திய ஏற்பாட்டாளர்கள் மருதானை பொலிஸில் முறைபாடொன்றையும் வழங்கியுள்ளனர்.







No comments:
Post a Comment