August 4, 2014

வேலூர் பெண்கள் சிறையில் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் நளினி!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினி  இன்று முதல் வேலூர்ச் சிறையில் உண்ணாவிரதப்
போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக  மனுத் தாக்கல் செய்துள்ளார். வேலூர் பெண்கள் சிறையில் உள்ள பிற கைதிகள் நளினியுடன் கதைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளார்.  
அத்துடன் குறித்த சிறையில் உள்ள கைதிகள் பலர் சிறைக் காவலாளர்களால் தாக்கப்பட்டுள்ளமை, சிறையில் சுத்தமான குடிநீர் வசதி இல்லை ஆகியவற்றைக் கண்டித்தே காலவரையறையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடவுள்ளதாக நளினி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment