August 16, 2014

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில் அறிவொளி கல்வி நிலையம் திறப்பு நிகழ்வு!

தமிழ்ச்சிறார்கள் இலவச கற்றல் நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு வசதியாக த.தே.ம.மு வின் வவுனியா மாவட்ட கல்வி மேம்பாட்டு பிரிவினூடாக இலவச அறிவொளி கல்வி வளர்ச்சி நிலைய திறப்பும்,
மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் இன்று வவுனியா வடக்கு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளன.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில் இன்று முற்பகல் 11 மணிக்கு இலவச அறிவொளி கல்வி வளர்ச்சி நிலைய திறப்பும், பிற்பகல் 2 மணிக்கு மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளன.
வவுனியா வடக்கு கனகராயன் குளம், பெரிய குளம், புளியங்குளம், முத்துமாரி நகர் போன்ற இடங்களில் இலவச அறிவொளி கல்வி நிலையம் திறந்து வைக்கப்பட்டன.
இந்த நிலையத்தில் மாணவர்களுக்கு இரு பிரிவுகளாக வகுப்புக்கள் இடம்பெறவுள்ளன. அதாவது புலமைப்பரிசில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும், தரம்1,3 மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும் வகுப்புக்கள் இடம்பெறவுள்ளன.
இந்த நிகழ்வில் கனடா உறங்காவிழிகள் நிதியுதவியுடன் 110 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டன.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார். பொன்னம்பலம்,செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் மணிவண்ணன், மற்றும் கட்சி உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வவுனியா வடக்கு நெடுங்கேணி சேனப்புலவு கிராமத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில் இலவச அறிவொளி கல்வி நிலையம் திறக்கப்பட்டு இயங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment