சிங்களப் படையில் இணைந்த பெண்களுக்காக குரல் கொடுக்கும் நீங்கள் வறுமையை காட்டி அதனை நியாயப்படுத்தும் நீங்கள் , காரை நகரில் அண்மையில் சிறிலங்காப்
படைகளால் சீரழிக்கப்பட்ட பள்ளிச் சிறுமிகளுக்காக குரலெழுப்புவீர்களா?
தமிழர்கள் ஏழைகள் அல்ல ஏழைகள் ஆக்கப்பட்டிருக்கிறோம் எங்கள் வளமும் வாழ்வும் சிங்களப் படைகளாலும் அரசாலும் அழிக்கப்பட்டிருக்கிறது.
தமிழர்களின் வறுமை நிலைக்கு காரணமான சிங்களப் படைகளளுடன் சேர்வதை "வறுமை" என்ற ஒற்றைச் சொல்லில் அடக்கி நியாயப்படுத்த முடியாது.
தமிழ் பெண்களை தங்கள் படைகளுடன் இணைத்துக் கொள்வது மாத்திரமல்ல தமிழர்களின் பண்பாடுகளை சீரழிக்கும் நோக்குடன் பௌத்த பேரினவாத சக்திகள் காடையர் படைகளைப் பயன்படுத்துகிறது என்பதை ஒவ்வொரு தமிழ் மகனும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அவர்களின் வறுமை போக்கா நீங்கள் என செய்தீர்கள்?? வறுமை வாட்டிய கொடுமை தான் அவர்களின் இம் முடிவுகள்... யார் வந்தீர்கள் வறுமை துடைக்க? பேசுபவர்கள் பேசுகிறீர்களே தவிர என்ன செய்தீர்கள் நீங்கள்?
புலம்பெயர் தமிழர்கள் ஒருபகுதியினர் உதவிகள் வழங்குகின்றனர் எல்லோரும் செயலாற்ற வேண்டும்.
No comments:
Post a Comment