August 5, 2014

ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவில் 30 பேர் வரையில் சாட்சியமளித்துள்ளனர்!

ஐ.நா விசாரணைக் குழுவுக்கு ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக இலங்கையைச் சேர்ந்த 30 பேர் சாட்சியமளித்துள்ளனர். யுத்தக்குற்றச் செயல் மற்றும் மனித உரிமை மீறல்கள்
தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவினரிடமே சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் மாநாட்டில் இது தொடர்பாக வாய்மொழி மூல அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
இவ்வாறு சாட்சியமளித்தவர்களின் ஆள் அடையாள விபரங்கள் வெளியிடப்படவில்லை.
விசாரணைக் குழுவிற்கு ஆலோசனை வழங்கும் நிபுணர்கள் அடுத்த வாரம் லண்டன் விஜயம் செய்து சாட்சியங்களை திரட்ட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment