July 31, 2014

இந்தியா செல்ல மறுக்கும் ஈழ அகதிகள் பப்புவா நியுகினி அனுப்பி வைக்கப்படுவர் – அவுஸ்ரேலியா அறிவிப்பு!

இந்தியாவுக்கு செல்ல மறுக்கும் ஈழ அகதிகள் அனைவரும் பப்புவா நியுகினிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.அண்மையில் படகு மூலம் அகதிகளாக சென்ற 157 ஈழ அகதிகளும் தற்போது கேர்ட்டின் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்தியாவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.
எனினும் இந்தியா செல்ல மறுக்கின்றவர்கள் பப்புவா நியுகினியில் உள்ள மானஸ் அல்லது நவுரு ஆகிய முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பில் உள்ள அவஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகரகம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment