July 31, 2014

மாணவர்கள் எதிர்ப்பு! அய்யா நெடுமாறனைச் சந்தித்தனர் கத்தி திரைப்படக் குழுவினர்!

கத்தி திரைப்படத்தைத் திரையிடுவதற்காக ஆதரவைத் திரட்டுவதற்காகச் இன்று மதியம் அய்யா பழ.நெடுமாறன் அவர்களின் பல்லாவரம் அலுவலகத்திற்கு சென்றுள்ள
திரைப்படக்குழுவினர் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.

கத்தி திரைப்படத்திற்கு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ள  எதிர்ப்பை அடுத்து தமிழகத்தில் அரசியல் தலைவர்களைச் சந்திக்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் இந்தக்குழுவினர். 

இறுதியாக மாணவர்களுடன் நடந்த சந்திப்பில், தாங்கள் சீமானுடன் உரையாடி தீர்வுகாணவோம் என்று இறுமாப்புடன் கூறியிருந்தார்கள்.

இந்த நடவடிக்கைகள் குறித்து மாணவர்கள் கருத்துத் தெரிவிக்கும்போது நாங்கள் மாணவர் சக்தி நாங்கள் அரசியல் வாதிகள் அல்ல. நாங்கள் எங்களுடைய செயற்பாடுகளிலிருந்து ஒரு போதும் பின்வாங்கப் போவதில்லை என உறுதி படத் தெரிவித்துள்ளார்கள்.

No comments:

Post a Comment