June 9, 2014

மீண்டும் தேடுதல் வேட்டையில் இலங்கை இராணுவம்

அண்மையில் மடு பிரதேசத்தில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கைகளின் போது, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதன்போது ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், அவர் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட வெடிபொருட்களை கொண்டு வந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்கு விற்பனை செய்யும் ஒருவர் என தெரியவந்துள்ளதாகவும் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கைதான சந்தேகநபர் வசமிருந்து டி.என்.டி வகை வெடி பொருட்கள் சுமார் 15 கிராம் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த வியாபாரத்துடன் தொடர்புடைய, தப்பிச் சென்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் குறித்து தகவல் கிடைத்துள்ளதாக அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேலும் தப்பியோடிய சந்தேகநபர் விடுதலைப் புலிகளால் குண்டுகள் புதைக்கப்பட்ட இடங்கள் பற்றி அறிந்தவர் எனவும் கைதான சந்தேகநபர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தப்பிச் சென்ற சந்தேகநபரைக் கைதுசெய்ய விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர்.

No comments:

Post a Comment