ஊடகவியலாளர்களது பயிற்சிப்பட்டறை குழப்பியடிக்கப்பட்டமை இலங்கையில் ஊடகத்துறை எதிர்கொண்டுள்ள நெருக்குவாரங்களின் அடையாளமேயென
தெரிவித்துள்ள யாழ்.ஊடக அமையம் அதனை வன்மையாக கண்டித்துமுள்ளது. இன்று யாழ்.ஊடக அமையத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுகையில்,
இலங்கையின் வடபுலத்தில் ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் மிக மோசமான கட்டத்தினை அடைந்துள்ள நிலையினில் அவர்களது துறைசார் அறிவு மேம்பாட்டிற்கான பயிற்சிப்பட்டறைகளை கூட இனவாத சாயம் பூசி அரசு தடுக்க முற்படுவதை யாழ்.ஊடக அமையம் வன்மையாக கண்டிக்கின்றது.
ஊழல்களிற்கு எதிரான இலங்கை அமைப்பு (டிரான்ஸ் பேரன்சி இன்ரர்நசனல் - இலங்கை) வட- கிழக்கு ஊடகவியலாளர்களிற்கென ஏற்பாடு செய்திருந்த புலனாய்வு செய்தி அறிக்கையிடல் தொடர்பான பயிற்சி பட்டறை மீண்டும் அரசு ஆதரவு கும்;பல்களினால் குழப்பியடிக்கப்பட்டுள்ளது. நூற்றிற்கும் மேல் திரண்ட கும்பலொன்றினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டமொன்றினையடுத்தே இப்பயிற்சி பட்டறை மீண்டும் குழப்பியடிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 22ம் திகதி பொலநறுவையின் கிரித்தல பகுதியினில் வட - கிழக்கு ஊடகவியலாளர்களிற்கு ஊழல்களிற்கு எதிரான இலங்கை அமைப்பினரால் ஏற்பாடு செய்திருந்த இதே பயிற்சிப்பட்டறை பாதுகாப்பு தரப்பின் நேரடியான தலையீட்டினால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது பற்றிய புலனாய்வு அறிக்கையிடல் எனும் தலைப்பில் இப்பயிற்சி பட்டறை ஏற்பாடாகியிருந்தது. பாதுகாப்பு அமைச்சின் அப்போதைய உத்தரவையடுத்து மின்னேரியா படைத்தளத்திலிருந்தும் நேரில் வருகை தந்தவர்கள் விடுத்த அச்சுறுத்தலையடுத்து அப்போது இப்பயிற்சி பட்டறை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஊடகவியலாளர்கள் இடையில் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் மீண்டும் ஒரு வார கால அவகாசத்தின் பின்னராக தடுத்து நிறுத்தப்பட்டிருந்த அதே பயிற்சிப்பட்டறை மீண்டும் நீர்கொழும்பிலுள்ள விடுதியொன்றில் கடந்த 6ம் திகதி ஆரம்பமாகியிருந்தது. இந்நிலையில்; இப்பயிற்சிப்பட்டறையினை இடைநிறுத்தக்கோரி குறித்த விடுதி முன்னதாக ஆர்ப்பாட்டமொன்றை கும்பலொன்று நடத்தியுள்ளது.
ஆர்ப்;பாட்டகாரர்கள் தமது பிரதான கோரிக்கையாக பயிற்சிப்பட்டறையினை இடைநிறுத்தவும் ஊடகவியலாளர்களை வெளியேற்றவும் கோரியிருந்தனர். எனினும் இதே பயிற்சி பட்டறைகள் சக இன ஊடகவியலாளர்களிற்கு நடத்தப்பட்ட போது எந்தவித எதிர்ப்பும் இருந்திருக்கவில்லை. அதனால் இந்நடவடிக்கை உள்நோக்கம் கொண்டதென்பது அப்பட்டமாக தெளிவாகியிருக்கின்றது. அத்துடன் குறித்த கும்பல் ஏற்கனவே முன்னேற்பாடுடனேயே அங்கு வந்திருந்தமையும் அம்பலமாகியுள்ளது.
இலங்கை அரசோ ஒருபுறம் ஆணைக்குழுவின் பரிந்துரைகளினை அமுல்படுத்திக்கொண்டிருப்பதாக சர்வதேசத்திற்கு பிரச்சார செய்து கொண்டிருக்கின்றது. சரண் அடைந்தவர்கள் பற்றியும் காணாமல் போனவர்கள் பற்றியும் நாள் தோறும் புள்ளிவிபரங்களை வெளியிட்டுக்கொண்டுமிருக்கின்றது. ஆனால் உள்ளுரிலோ ஆணைக்குழுவின் பரிந்துரைகள் பற்றியோ அவற்றின் அமுலாக்கம் பற்றியோ உள்ளுரினில் தமிழ் ஊடகவியலாளர்கள் பேசக்கூட அனுமதி மறுக்கப்பட்டும் வருகின்றது.
வட-கிழக்கில் கடந்த காலங்களினில் பல ஊடகவியலாளர்கள் நெருக்கடியான காலப்பகுதிகளினில் கொல்லப்பட்டுள்ளனர். சிலர் கடத்தப்பட்டு காணாமல் போயுமுள்ளனர். சிலர் கொலை முயற்சி தாக்குதல்களிலிருந்து படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். இத்தகைய சூழல் ஊடகவியலாளர்கள் பலரையும் ஊடக துறையிலிருந்து வெளியேறவும் நாட்டைவிட்டு தப்பிச்செல்லவும் வழிகோலியிருந்தது.
எனினும் அண்மைக்காலங்களில் மீண்டும் அதிகரித்துள்ள அதே சூழல் மிகமோசமான நெருக்குவாரங்களை ஊடகவியலாளர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு சில மாதங்களினுள்; மட்டும் யாழ்ப்பாணத்தினில் பணியாற்றி வந்திருந்த இளம் ஊடகவியலாளர்கள் மூவர் நாட்டை விட்டு உயிர் அச்சுறுத்தல்கள் காரணமாக பாதுகாப்பு கருதி வெளியேறியுள்ளனர்.
நீர்கொழும்பினில் இத்தகைய அச்சுறுத்தல்கள் நடந்து கொண்டிருந்த வேளை அண்மையில் கொலை முயற்சி தாக்குதலில் உயிர்தப்பிய யாழ்ப்பாண ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன் இலங்கையினை விட்டு வெளியேறி மேற்குலக நாடொன்றில் அடைக்கலம் புகுந்துள்ளார்.
தொடரும் இத்தகைய ஊடக அடக்குமுறைகள் தொடர்ந்தும் இலங்கை ஊடகவியலாளர்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு பொருத்தமற்ற நாடென்பதை சொல்லியே நிற்கின்றதென்பதை சர்வதேசம் புரிந்து கொள்ளுமென்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் என்றுள்ளது.

No comments:
Post a Comment